36.9 C
Chennai
May 30, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழ்நாட்டில் நவ.11ம் தேதி வரை கனமழை தொடரும்

தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய கனமழை நவம்பர் 11 ஆம் தேதி வரை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்மேற்கு வங்கக் கடலில் நவம்பர் 9ம் தேதி இலங்கைக் கடற்கரையில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது வடமேற்கு திசையில் தமிழகம்-புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் லேசான வலுப்பெற வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இது அடுத்தகட்டமாக தாழ்வு மண்டலமாகவோ அல்லது புயல் சின்னமாகவோ வலுவடைவது பற்றி நாளை மறுநாள்தான் கணிக்க முடியும் என்று ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நாளை மறுநாள் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழகத்தில் 9-ந் தேதியில் இருந்து அனேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

வருகிற 10-ந் தேதியை பொறுத்தவரையில் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அடுத்த இரண்டு அல்லது 3 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் மற்றும் கேரளாவில் இடியுடன் கூடிய மிதமான மழையும், அதன் பிறகு இடியுடன் கூடிய மிதமான மழையும் பெய்யும். நவம்பர் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்யும். தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கன மழையானது நவம்பர் 11 ஆம் தேதி வரை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த மூன்று மணி நேரத்தில் திருவள்ளூர்,சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading