சென்னையில் பெய்து வரும் கனமழை எதிரொலியாக 22 விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்று மாலை முதல் தொடர் கனமழை பெய்து வருகின்றது. இன்றும் கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய 12 சர்வதேச விமானங்கள் உள்பட 22 விமானங்கள் புறப்படுவதில் ஒரு மணிநேரத்துக்கு மேல் தாமதம் ஏற்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாட்டில், தென் மாவட்டங்களிலும் தொடர் கனமழை காரணமாக பயணிகள் எண்ணிக்கை குறைவாக காணப்படுவதால் சில விமானங்கள் ரத்து செய்யவும் வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.







