சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எழும்பூர், மவுண்ட் ரோடு, நுங்கம்பாக்கம் போன்ற பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்தது.
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதி ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்தது இதனை அடுத்து சென்னை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய இருப்பதாக என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில் திடீரென சென்னையில் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை மழை பெய்தது. குறிப்பாக சென்னை எழும்பூர், ராயப்பேட்டை, அசோக் நகர், கேகே நகர், எழும்பூர், சேப்பாக்கம், தேனாம்பேட்டை, அண்ணா சாலை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்தது.
காலை நேரங்களில் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் நள்ளிரவு நேரதில் மழை பெய்வதால் குளிர்ச்சியான சூழல் ஏற்படுவது வழகமாகியுள்ளது. அதோடு எதிர்பாராத நேரத்தில் ஆங்காங்கே திடீரென மழை பெய்வதால் இருசக்கர வாகன ஓட்டிகள் மழையில் நனைந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.







