ஆப்கானிஸ்தானில் திடீர் வெள்ளம்: 33 பேர் பலி, 27 போ் காயம்!

ஆப்கானிஸ்தானில் பெய்து வரும் பருவமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 33 போ் உயிரிழந்தனா். மேலும், 27 போ் காயமடைந்தனா். வெள்ளம்,  பூகம்பம்,  பனிச்சரிவு,  நிலச்சரிவு மற்றும் வறட்சி உள்ளிட்ட இயற்கைப் பேரழிவுகளால் மிகவும் பாதிக்கப்படக்…

ஆப்கானிஸ்தானில் பெய்து வரும் பருவமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 33 போ் உயிரிழந்தனா். மேலும், 27 போ் காயமடைந்தனா்.

வெள்ளம்,  பூகம்பம்,  பனிச்சரிவு,  நிலச்சரிவு மற்றும் வறட்சி உள்ளிட்ட இயற்கைப் பேரழிவுகளால் மிகவும் பாதிக்கப்படக் கூடிய நாடுகளில் ஒன்றாக ஆப்கானிஸ்தான் உள்ளது.  இந்த நிலையில்,  ஆப்கானிஸ்தானில் பெய்து வரும் பருவமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 33 போ் உயிரிழந்தாகவும்,  27 போ் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வெள்ளத்தால் தலைநகா் காபூலும்,  நாட்டின் பல்வேறு மாகாணங்களும்  பாதிக்கப்பட்டுள்ளன.  இந்த வெள்ளத்தில் சிக்கி 600-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்ததாகவும்,  சுமாா் 200 கால்நடைகள் உயிரிழந்ததாகவும் பேரிடா் மேலாண்மை அமைச்சகம் தெரிவித்தது.  வரும் நாட்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதுடன், உயிரிழப்புகள் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் அந்நாட்டு அமைச்சகம் எச்சரித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.