சென்னையில் வெளுத்து வாங்கும் மழை!

சென்னை தாம்பரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 12 மாவட்டங்களில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், சென்னை, திருவள்ளூர்,…

சென்னை தாம்பரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 12 மாவட்டங்களில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் தற்போது இடைவிடாது மழை பெய்து வருகிறது.

தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. தாம்பரம், குரோம்பேட்டை, கிண்டி, நுங்கம்பாக்கம், பெருங்களத்தூர், முடிச்சூர், சேலையூர் உள்ளிட்ட பகுதியில் தற்போது வரை பரவலாக மழை பெய்து வருவதால், சாலையில், ஆங்காங்கே மழை நீர் தேங்கியுள்ளது. இதனால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால், அலுவலகம் செல்வோர் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply