செய்திகள்

பட்ஜெட் கூட்டத்தொடர் தேதி அறிவிப்பு!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை வரும் 29ம் தேதி தொடங்க, நாடாளுமன்ற விவகாரத்திற்கான மத்திய அமைச்சரவைக் குழு, பரிந்துரைத்துள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை எப்போது தொடங்கலாம் என்பது குறித்து, ஆலோசனை நடத்திய நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு, தனது பரிந்துரையை மத்திய அரசுக்கு அளித்துள்ளது. அதில், பட்ஜெட் கூட்டத் தொடரை, இரண்டு கட்டங்களாக நடத்த பரிந்துரைத்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

முதல் கூட்டத் தொடரை, வரும் 29ம் தேதி தொடங்கி, பிப்ரவரி 14ம் தேதி வரை நடத்த பரிந்துரை அளித்திருப்பதாகக் கூறப்படுகிறது. முதல் கூட்டத் தொடரில், பிப்ரவரி 1-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது.

பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் பகுதியை, மார்ச் 8ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ம் தேதி வரை நடத்தவும், மத்திய அமைச்சரவைக் குழு பரிந்துரைத்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், வளர்ச்சி சார்ந்ததாகவும் இந்த பட்ஜெட் இருக்கும் என்று, ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ், கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஓமலூரில் முதல்வர் பழனிசாமி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை

Gayathri Venkatesan

தமிழக மாணவர்களுக்கு ஆந்திராவில் தேர்வு மையமா?-அன்புமணி இராமதாஸ்

Web Editor

தேசிய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத் தொகை-அரசாணை வெளியீடு

Web Editor

Leave a Reply