வேலூரை சேர்ந்த மார்க் (MARC) என்கிற பங்குச் சந்தை முதலீட்டு நிறுவனத்திற்கு எதிரான புகாரில் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க தமிழக காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னையை சேர்ந்த கார்த்திக் என்பவர் முதலீடு செய்த ரூ. 2.50 லட்சத்திற்கு ஜூலை மாதம் முதல் லாபம் திருப்பி அளிக்கப்படவில்லை. பங்குதாரர்கள் தலைமறைவு என புகார் அவர் புகார் அளித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தமிழக காவல் துறை டிஜிபி, சென்னை காவல் ஆணையர் ஆகியோரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லாததால் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பதாக கூறி மனு தாக்கல் செய்தார்.
மார்க் நிறுவனத்தின் பங்குதாரர்கள் என கூறப்பட்ட மோகன்பாபு விஜயன், ஜனார்த்தனன் சுந்தரம், வேதநாராயணன் சுந்தரம், லக்ஷ்மி நாராயணன் சுந்தரம் ஆகியோருக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது.
முதலீட்டின் மீது ஆண்டுக்கு 26% மற்றும் மாதத்திற்கு 2% தொகை வருமானம் கிடைக்கும் என உத்தரவாதம் அளித்து மோசடி செய்ததாக வழக்கு தொடுத்தார்.
மார்க் நிறுவனம் ரூ.6000 கோடி அளவிற்கு மோசடி செய்துள்ளதாக புகார்கள் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அவரது மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டுள்ளது.