குற்றாலம்-ஒகேனக்கல் அருவிகளில் குளிக்க நீடிக்கும் தடை

தென்காசி மாவட்டம், குற்றலாத்தில் 5வது நாளாக அருவிகளில் தொடர்ந்து காட்டாற்று வெள்ளம் இருந்து வருகிறது. சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை நீடித்து வருகிறது. தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளும்…

தென்காசி மாவட்டம், குற்றலாத்தில் 5வது நாளாக அருவிகளில் தொடர்ந்து காட்டாற்று வெள்ளம் இருந்து வருகிறது. சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை நீடித்து வருகிறது.

தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளும் இடைவிடாத கனமழை பெய்து வருவதால் இன்றுடன் 5 வது நாளாக ஐந்தருவி மெயின் அருவி பழைய குற்றாலம் புலியருவி சிற்றருவி உள்ளிட்ட அருவிகளில் காற்றாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிப்பதற்கு தடை தொடர்கிறது.

இதனிடையே, திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதை அடுத்து, இரண்டாவது நாளாக சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை நீடிக்கிறது.

இந்நிலையில், கரூர் மாவட்டம் மாயனூர் காவிரி கதவணைக்கு வரும் நீரின் அளவு 6 மணி நேரப்படி 2 லட்சத்து 14 ஆயிரத்து 252 கன அடியாக அதிகரித்துள்ளது.

மாயனூர் கதவணையை கடந்து டெல்டா மாவட்டங்களுக்கு 2,13,132 கன அடி நீர் சென்று கொண்டுள்ளது. மூன்றாவது நாளாக ராமநதி 300 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம், கடையம் மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர்மழை காரணமாக 84 அடி கன அளவு கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியதால் மூன்றாவது நாளாக இன்று 300 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பாதுகாப்பு பணிகளுக்கு அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு மையத்தில் இருந்து 24பேர் கொண்ட 4வது தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் குமாரபாளையம் வந்தடைந்தனர்.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பஞ்சப்பள்ளி சின்னாறு அணை தொடர் மழைப்பொழிவின் காரணமாக அணை நிரம்பியதால் அணையின் பாதுகாப்பு கருதி பொது பணி துறை அதிகாரிகள் 250கன அடி வீதம் அணையிலிருந்து நீரை திறந்துள்ளனர்.

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 2 லட்சமாக குறைந்துள்ளது.

தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரியில் நேற்று மாலை நிலவரப்படி இரண்டு லட்சத்து 50 ஆயிரம் அடியில் இருந்து நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி 2 லட்சம் கன அடியாக உள்ளது. மேலும் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி அவர்கள் பரிசல் இயக்கவும் குளிக்கவும் 28 வது நாளாக தடை விதித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.