தமிழ்நாட்டின் சகோதர, சகோதரிகளுக்கு ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்- ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பொது மக்களுக்கு ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ஆங்கில வருடப்பிறப்பு இன்று நள்ளிரவு தொடங்க உள்ளது. இதையொட்டி சென்னையில் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. பொது இடங்களில்…

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பொது மக்களுக்கு ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

ஆங்கில வருடப்பிறப்பு இன்று நள்ளிரவு தொடங்க உள்ளது. இதையொட்டி சென்னையில் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. பொது இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

புத்தாண்டு தினத்தன்று எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடந்துவிட கூடாது என விமானநிலையம், ரயில்நிலையம், மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் தொடர் கண்காணிப்பில் போலீஸ் அதிகாரிகள் ஈடுபட்டுத்தப்பட்டுள்ளனர். ஆங்கிலப் புத்தாண்டுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் தனது புத்தாண்டு வாழ்த்து செய்தியில், தமிழ்நாட்டின் சகோதர, சகோதரிகளுக்கு எனது மனமார்ந்த ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள். புத்தாண்டு அனைவருக்கும் மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம், வெற்றியை கொண்டு வரட்டும் என கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.