HALLOW MAN வேடத்தில் வலம் வந்த மருத்துவர்!

தாம்பரத்தில் முன்கள பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மருத்துவர் ஒருவர் HALLOW MAN வேடத்தில் வந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. கொரோனா பாதிப்பு காரணமாக உலக நாடுகள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளன. கொரோனா காலத்தில்…

தாம்பரத்தில் முன்கள பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மருத்துவர் ஒருவர் HALLOW MAN வேடத்தில் வந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

கொரோனா பாதிப்பு காரணமாக உலக நாடுகள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளன. கொரோனா காலத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் பங்கு அளப்பரியது. இந்நிலையில் நாட்டையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனாவில் இருந்து நம்மை பாதுகாத்திட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மருத்துவர் ஒருவர் புதிய முயற்சியை மேற்கொண்டார்.

மருத்துவரான மதன் குமார், தாம்பரம் அடுத்த மணிமங்களத்தில் இருந்து சென்னை தி.நகர் வரை இருசக்கரவாகனத்தில் Hollow Man படத்தில் வரும் கதாபாத்திரம் போல் வேடமணிந்து வித்தியாசமான முறையில் வலம் வந்தார். இதனை சாலையில் சென்ற பொதுமக்கள் அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்ததோடு மட்டுமல்லாமல், அவருடன் செல்ஃபியும் எடுத்துக் கொண்டனர். மதன் குமார் அங்கு இருந்த போக்குவரத்து போலீசாருக்கு பூக்களை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply