சுகாதார அலுவலர் தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு

தமிழ்நாடு பொது சுகாதாரப் பணிகளில் அடங்கிய சுகாதார அலுவலர் பதவிக்கான கணினி வழித் தேர்வுக்கு ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக நேரடி நியமனத்திற்கு அறிவிக்கை செய்யப்பட்ட தமிழ்நாடு…

தமிழ்நாடு பொது சுகாதாரப் பணிகளில் அடங்கிய சுகாதார அலுவலர் பதவிக்கான கணினி வழித் தேர்வுக்கு ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக நேரடி நியமனத்திற்கு அறிவிக்கை செய்யப்பட்ட தமிழ்நாடு பொது சுகாதாரப் பணிகளில் அடங்கிய சுகாதார அலுவலர் பதவிக்கான காலிப் பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்வு 13.02.2023 அன்று முற்பகல் மற்றும் பிற்பகலில் நடைபெற உள்ளது.

தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் ஹால்டிக்கெட்டுகள் தேர்வாணையத்தின் இணையதளங்களான http://www.tnpsc.gov.in, http://www.tnpscexams.in ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

விண்ணப்பதாரர்கள், தங்களுடைய ஒருமுறை பதிவின் தன்விவரப் பக்கத்தில் விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வுக்கூட அனுமதிச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.