குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளுக்குத் தேவையான ஊழியர்களை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் அரசு தேர்வு செய்து வருகிறது. திறமையான ஊழியர்களை கண்டறிய பல்வேறு போட்டித்தேர்வுகள் மற்றும் நேர்காணல் ஆகியவற்றைத் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மேற்கொண்டு வருகிறது அதன்படி, சமீபத்தில் குரூப் 4 தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அண்மைச் செய்தி: ‘ஸ்மார்ட் வகுப்பறை; ஒப்பந்தப்புள்ளி கோரியது சென்னை மாநகராட்சி’
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகள் வருகின்ற ஜூலை 24-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியாகியுள்ளது. தேர்வர்கள் https://www.tnpsc.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று ஹால் டிக்கெட்டை டவுன்லோடு செய்துகொள்ளலாம்.
தமிழ்நாட்டில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர், இளநிலை உதவியாளர், நில அளவையாளர் உள்ளிட்ட 7,382 அரசுப் பணியிடங்களை நிரப்புவதற்காக இந்த தேர்வு நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.