சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 6 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கும் பணிக்கு சென்னை மாநகராட்சி ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது.
சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ், 119 தொடக்கப் பள்ளிகள், 92 நடுநிலைப் பள்ளிகள், 38 உயர்நிலைப் பள்ளிகள், 32 மேல்நிலைப் பள்ளிகள் என்று மொத்தம் 291 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க மாநகராட்சி கல்வித் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 6 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கும் பணிக்காக ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.
அண்மைச் செய்தி: ‘“அதிமுகவின் புதிய நிர்வாகிகள் நியமனம் செல்லாது” – ஓபிஎஸ்’
ஒப்பந்தப்படிவங்களை https://tntenders.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புதிதாக அமைக்கப்பட உள்ள இந்த ஸ்மார்ட் வகுப்பறைகளில் தொடுதிரை வழியாக ஆசிரியர்கள் பாடம் நடத்தும் வசதி, தெளிவான ஒலி, ஒளி உட்கட்டமைப்பு, பிறநகரங்களிலிருந்தும் தரைவழியாகப் பாடம் நடத்தக்கூடிய வகையிலான தொலைத் தொடர்பு வசதி போன்றவை ஏற்படுத்தித் தரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 மாதத்தில் ஒப்பந்தபுள்ளிகள் இறுதி செய்யப்பட்டு பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.








