புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை!

குடியரசு துணைத் தலைவர் வருகையையொட்டி நாளை புதுச்சேரியில் பள்ளிகளுக்கு அரை நாள் விடுமுறை விடப்பட்டுள்ளது. 

இந்தியாவின் துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர் மூன்று நாள் அரசு பயணமாக இன்று புதுச்சேரி வந்தடைந்தார். அவரை துணைநிலை ஆளுநர் கைலாஷ் நாதன், முதலமைச்சர் ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோர் வரவேற்றனர்.

தொடர்ந்து நாளை மாலை 4 மணி அளவில் ஜிப்மர் மருத்துவமனையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அவர் பங்கேற்க சொல்லும்போது சாலையில் போக்குவரத்து நிறுத்தம் செய்யப்படும், அந்நேரத்தில் பள்ளிகள் விடப்பட்டால் மாணவர்கள் வீட்டுக்கு செல்லும்போது சிரமப்படுவார்கள் என்பதாலும், போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டும் புதுச்சேரியில் உள்ள பள்ளிகளை 2 மணிக்கு முடித்துகொள்ள பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.