புதுச்சேரியில் நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 ரூபாய்க்கு முடி திருத்தம் செய்யும் இளைஞர் அனைவரையும் கவர்ந்து வருகிறார்.
புதுச்சேரி சாரம் பகுதியை சேர்ந்தவர் பட்டதாரி இளைஞர் விஜய். இவர் காமராஜர் சாலையில் சலூன் கடை நடத்தி வருகிறார். அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களின் கஷ்டங்களை எளிதாக புரிந்து கொண்டு சமூக வலைதளங்கள் மூலம் விளம்பரம் செய்தும், தொலைபேசியில் முன்பதிவு செய்தும் நாள் ஒன்றுக்கு 10-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பத்து ரூபாய் கட்டணத்தில் சிகை அலங்காரம் செய்து வருகிறார்.
புதுசேரியில், நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், மாணவர்கள் முடி திருத்தம் செய்வது கட்டாயம் என்பதாலும், ஏழை மாணவர்களால் முடி திருத்தம் செய்ய 150 ரூபாய் வரை செலவு செய்ய இயலாது என்பதாலும், விஜய் 10 ரூபாய் கட்டணத்தில் முடி திருத்தம் செய்து விடுகிறார். பட்டதாரி இளைஞரின் இந்த செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
- பி.ஜேம்ஸ் லிசா







