முக்கியச் செய்திகள் சினிமா

’ஹாய் செல்லம்’ – பிரகாஷ்ராஜுக்கு இன்று பிறந்தநாள்!!!

பன்முக திறமைக்குச் சொந்தக்காரரான பிரகாஷ்ராஜுக்கு இன்று பிறந்தநாள். அவரின் திரை பயணம் பற்றி இந்த செய்திக்குறிப்பில் பார்க்கலாம்… 

வில்லன் நடிகராகத் தனது திரைப்பயணத்தை தொடங்கிய பிரகாஷ்ராஜ், தன்னுடைய நடிப்புத் திறமையை மெருகேற்றி, குணச்சித்திர நடிகராகவும், கதாநாயகனாகவும், சில நேரங்களின் நகைச்சுவையிலும் கலக்கி வருகிறார் பிரகாஷ்ராஜ் .

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இன்று, அவரின் 58-வது பிறந்த நாள்.இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் இயக்குநர், தொலைக்காட்சி தொகுப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர். தமிழ் சினிமாவில் பாலச்சந்தரால் ‘டூயட்’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையிற்கு அறிமுகமானவர் பிரகாஷ் ராஜ். வெறும் 300 ரூபாய் சம்பளத்தின் தனது பயணத்தைத் தொடங்கிய நடிகர் பிரகாஷ் ராஜ் இன்று தன்னுடைய திரைப்படங்களுக்காக 5 கோடி ரூபாய்க்கும் மேல் சம்பளம் பெறுகிறார்.

பிரகாஷ் ராஜ், துலு, கன்னடம், தமிழ், தெலுங்கு, மராத்தி, இந்தி, மலையாளம் ஆகிய பல மொழிகளில் புலமை கொண்டவர். 90களின் பிற்பகுதியில் நான்கு மொழிகளிலும் தொடர்ந்து பல்வேறு வகையான நடிப்புகளை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனங்களில் இடம்பிடிக்கத் தொடங்கினார் பிரகாஷ்ராஜ்.

இவரை மக்கள் பிரபலமாக ஏற்றுக் கொண்டது கில்லி படத்திலிருந்துதான். ‘செல்லம் ஐ லவ் யூ’ என பிரகாஷ் ராஜ் சொல்லும் ஸ்டைல் இவரது ட்ரேட் மார்க்கானது. ‘காஞ்சிவரம்’ படத்தில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும், ‘இருவர்’ படத்திற்காகச் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதையும் பெற்ற பிரகாஷ்ராஜ் இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. தற்போது இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார்.

2019 மக்களவைத் தேர்தலில் பெங்களூரு தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வி அடைந்தாலும் தொடர்ச்சியாக அரசியல்வாதிகளைத் தாக்கியும் அரசியல் குறித்தும் தன்னுடைய கருத்துக்களைப் பதிவிட்டு வருகிறார்.

ஒரு முழுமையான கலைஞனாக பல விருதுகளை வென்று திரைத்துறை மீதுள்ள தன் காதலை வெளிப்படுத்தும் பிரகாஷ்ராஜ் அவர் இயங்கும் அனைத்துத் தளங்களிலும் மேன்மேலும் ஜொலிப்பார் என்பதை மறுப்பதற்கில்லை.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பள்ளி மாணவர்களை வேலைக்கு அனுப்பும் பெற்றோர் மீது நடவடிக்கை – அமைச்சர் அன்பில் மகேஸ்

Jeba Arul Robinson

2.35 லட்சம் பேருக்கு புதிதாக கொரோனா தொற்று

G SaravanaKumar

’வட இந்தியர்களுக்குத் தற்காலிக (அ) நிரந்தர குடியிருப்பு வழங்க உதவ வேண்டும்’