முக்கியச் செய்திகள் உலகம் சினிமா

மறைந்தார் ஹாக்ரிட்: ஹாரி பாட்டர் படங்களில் நடித்த ராபி கோல்ட்ரேன் காலமானார்

ஹாரி பாட்டர் படங்களில் ஹாக்ரிடாக நடித்த ராபி கோல்ட்ரேன் தனது 72 வயதில் உடல்நலக்குறைவு காரணமாகக் காலமானார்.

பிரபல ஹாலிவுட் திரைப்படத் தொடரான ஹாரி பாட்டர் படங்களில் ஹாக்ரிட் என்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் ராபி கோல்ட்ரேன் தனது 72 வயதில் காலமானார். இங்கிலாந்தின் ஸ்காட்லாந்தில் மார்ச் 30, 1950 அன்று கோல்ட்ரேன் பிறந்தார். பிரிட்டனின் மிகவும் பிரபலமான நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான இவர் ஹாலிவுட்டில் இரண்டு ஜேம்ஸ் பாண்ட் படங்கள் உட்படப் பல படங்களில் கோல்ட்ரேன் நடித்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பிரிட்டன் நாட்டின் பிரபல பெண் எழுத்தாளரான ஜேகே ரவ்லிங் எழுதிய ஹாரி பாட்டார் என்ற புதினத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம் தான் ஹாரி பாட்டர் மாயாஜால உலகைக் கதைக்களமாகக் கொண்ட இந்த படம் குறிப்பாகச் சிறு வயது ரசிகர்களை இன்றுவரை தன்வசப்படுத்தியுள்ளது.

இந்த திரைப்படத் தொடரில் முக்கியத்துவம் வாய்ந்த கதாப்பாத்திரகளில் ஒன்றான ரூபியஸ் ஹக்ரிட் என்ற பாத்திரத்தில் நடித்தவர் ராபி கால்ட்ரேன், வெளியான 8 பாகங்களிலும் நீளமான தாடி, முடியுடன், பெரிய கோட் அணிந்து சிறுவர்கள் மற்றும் திரை ரசிகர்களின் மனங்களைக் கவர்ந்தார்.

இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக ஸ்காட்லாந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சை பலனிற்றி நேற்று உயிரிழந்தார். இந்த துக்க சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அதிமுகவின் 10 ஆண்டு ஆட்சியில் தமிழ்நாட்டையே சீரழித்துள்ளனர்; முதலமைச்சர்

EZHILARASAN D

ஆறுமுகசாமி ஆணையம் நாளை அறிக்கை தாக்கல்

Web Editor

காதலிக்க மறுத்த மாணவி: கல்லால் அடித்துக் கொன்ற இளைஞர்!

Web Editor