மக்கள் குடிக்கும் தண்ணீரில் விஷத்தை கலக்க முயற்சி செய்த சம்பவம்!

ஃபுளோரிடாவில் ஹேக்கிங் மூலம் பொது மக்கள் குடிக்கும் தண்ணீரில் விஷத்தை கலக்க முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஃபுளோரிடா ஒல்டுஸ்மார் பகுதியில் சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அங்கு வசிக்கும் பொது…

ஃபுளோரிடாவில் ஹேக்கிங் மூலம் பொது மக்கள் குடிக்கும் தண்ணீரில் விஷத்தை கலக்க முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஃபுளோரிடா ஒல்டுஸ்மார் பகுதியில் சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அங்கு வசிக்கும் பொது மக்கள் குடிப்பதற்கு ஒல்டுஸ்மார் பகுதியிலுள்ள நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து தண்ணீர் விநியோகிக்கப்படும். அங்கிருந்து விநியோகிக்கும் தண்ணீரின் அமைப்பில் ஒரு மில்லியனுக்கு 100 பாகங்கள் அளவே சோடியம் ஹைட்ராக்சைடு பயன்படுத்தப்படும். இந்நிலையில், அங்கு வேலை செய்யும் ஊழியர் கணினியில் ஏற்படும் ஊடுருவலை கவனித்தார்.

அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் கணினியை ஹேக் செய்து கொண்டிருந்தனர். மேலும், தண்ணீரிலுள்ள சோடியம் ஹைட்ராக்சைடின் அளவை 11,000% ஆக அதிகரித்திருந்தனர். இதையறிந்த ஆப்பரேட்டர், சோடியம் ஹைட்ராக்சைடின் அளவை குறைத்தார். மேலும் அதனுடைய அளவு தண்ணீரில் அதிகமாக இருந்தால் மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் என்று கூறப்படுகிறது. பின்னர் இச்சம்பவம் குறித்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். தகவல் அறிந்த போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply