ஆயிரத்தில் ஒருவன் , மயக்கம் என்ன படத்திற்குப் பின் மீண்டும் செல்வராகவனுடன் இணையும் #GVPrakash

2011 ஆம் ஆண்டிற்கு பிறகு ஜிவி பிரகாஷ் மீண்டும் செல்வராகவனுடன் இணைந்து பணியாற்றப் போவதாக அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, பார்த்திபன், ரீமா சென், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடிப்பில்…

2011 ஆம் ஆண்டிற்கு பிறகு ஜிவி பிரகாஷ் மீண்டும் செல்வராகவனுடன் இணைந்து பணியாற்றப் போவதாக அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, பார்த்திபன், ரீமா சென், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடிப்பில் 2010-ம் ஆண்டு வெளியான படம் ‘ஆயிரத்தில் ஒருவன்’. ரவீந்திரன் தயாரிப்பில் வெளியான இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக ராம்ஜி, இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் பணிபுரிந்திருந்தார்கள். இந்தப் படம் வெளியான போது கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ஆனால், இப்போது பலரும் ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ எப்போது வெளியாகும் என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். 


ஜி.வி பிரகாஷ் மற்றும் இயக்குனர் செல்வராகவன் கூட்டணியில் ஆயிரத்தில் ஒருவன் மற்றும் மயக்கம் ஆகிய படங்களின் பாடல்கள் ஹிட் அடித்தன. இதனைத் தொடர்ந்து 2011 ஆம் ஆண்டிற்கு பிறகு ஜிவி பிரகாஷ் மீண்டும் செல்வராகவனுடன் இணைந்து பணியாற்றப் போவதாக அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

ஜி.வி பிரகாஷ் சமீபத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் வெளிவந்த தங்கலான் திரைப்படத்திற்கு இசையமைத்தார். படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் மீண்டும் இருவரது கூட்டணியில் திரைப்படம் உருவாக உள்ளதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.