துப்பாக்கி சுடும் பயிற்சியின் போது வீட்டில் பாய்ந்த குண்டு

ஆவடி முத்தாபுதுப்பேட்டையில் சிஆர்பிஎப் பயிற்சி தளத்தில் நடந்த துப்பாக்கி சுடும் பயிற்சியின் போது குண்டானது குடியிருப்பு பகுதிக்குள் புகுந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை ஆவடி அருகே முத்தாபுதுப்பேட்டை என்ற…

ஆவடி முத்தாபுதுப்பேட்டையில் சிஆர்பிஎப் பயிற்சி தளத்தில் நடந்த துப்பாக்கி சுடும் பயிற்சியின் போது குண்டானது குடியிருப்பு பகுதிக்குள் புகுந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை ஆவடி அருகே முத்தாபுதுப்பேட்டை என்ற பகுதியில் சிஆர்பிஎப் பயிற்சி தளம் அமைந்துள்ளது. இங்கு சிஆர்பிஎப் வீரர்கள் துப்பாக்கி பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். இன்றும் வழக்கம் போல் வீரர்கள் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு குண்டு எதிர்பாராத விதமாக துப்பாக்கி சுடும் திசைக்கு நேர் எதிர் திசையில் 1.5 கி.மீ. தொலைவில் அமைந்திருந்த ஒரு வீட்டில் பாய்ந்துள்ளது. அதிர்ஷடவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து டிஐஜி தினகரன் நியூஸ் 7 தமிழுக்கு அளித்த பேட்டியில், ஆவடி துப்பாக்கி சுடும் மையத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சியின் போது வீட்டில் எதிர்பாராத விதமாக குண்டு பாய்ந்துள்ளது. இந்த சம்பவமானது மிகப்பெரிய தவறாக கருதுகிறேன். இவ்வளவு தூரம் கொண்டு செல்ல வாய்ப்பு இல்லை என தெரிவித்தார்.

மேலும், கை துப்பாக்கியில் பயன்படுத்தப்படும் குண்டின் அளவு 9mm ஆகும். இந்த குண்டானது இவ்வளவு தூரம் செல்லவதற்கான வாய்ப்பு இல்லை. பயிற்சியானது வடக்கு பார்த்து தான் எப்பொழுதும் நடைபெறும். இந்த குண்டு தெற்கு திசையில் பாய்ந்துள்ளது என குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், எதிர்திசையில் குண்டு பாய்ந்துள்ளது இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், பயிர்ச்சி தளத்தில் இருந்து குண்டு பாய்ந்து உள்ள அந்த வீடானது சுமார் 1.5 ஒன்றரை கிலோமீட்டர் தூரத்தில் இருப்பதாகவும் விளக்கமளித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.