குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவிற்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்து ஐ.பி.எல். நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
16வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் நேற்று நடக்கும் 18-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி, நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதியது. இந்த போட்டி பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மொஹாலியில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
முதலில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியது.
இதையடுத்து 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியது. குஜராத் அணியின் சார்பில் விருதிமான் சகா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இந்த ஜோடியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் சகா 19 பந்துகளில் 30 ரன்கள் எடுத்த நிலையிலும் ஆட்டமிழந்தார். நிதானமாக்வும் அதிரடியாகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் 40 பந்துகளில் தனது அரை சதம் எடுத்தார்.
கடைசி ஒவரில் வெற்றிக்கு 6 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் சுப்மன் கில் 67 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். தேவாட்டியா , டேவிட் மில்லர் ஆகியோர் கடைசிவரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றனர். குஜராத் அணி 19.5 ஒவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் எடுத்து வெற்றி வாகை சூடியது.
நேற்றைய பரபரப்பான போட்டியில் குஜராத் அணியின் பந்துவீச்சில் தாமதமானதால், குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவிற்கு ரூபாய் 12 லட்சத்தை அபராதமாக விதித்து ஐபிஎல் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.