குஜராத்தில் தான் போதைப்பொருள் அதிக அளவில் உற்பத்தி ஆகிறது. மத்திய அரசு இந்த போதைப் பொருள்களை தடுக்க முழுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி வலியுறுத்தினார்.
இதுகுறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மத்திய அரசு இதுவரை போதைப் பொருள் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால்தான் தமிழகத்தில் போதை பொருள் அதிக அளவு பரவி உள்ளது. முத்ரா துறைமுகம், விஜயவாடா துறைமுகத்தில் போதைப் பொருள் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
போதைப் பொருள் கடத்தல் போன்றவை அதிகளவில் நடைபெற்ற வருகிறது. வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட போதைப் பொருட்கள் குஜராத்தில் உள்ள துறைமுகம் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அங்கு தான் போதைப் பொருள் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
போதைப் பொருளைத் தடுக்கும் வகையில் காவல் துறை மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை நடத்தி பல்வேறு ஆலோசனைகளை நடத்தி போதைப் பொருள் குறித்து மாணவர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் முதலமைச்சர்.
மத்திய அரசால் தான் போதை பொருள் அதிகரித்து வருகிறது. துறைமுகங்களை தனியாருக்கு கொடுக்கும் நிலையை மாற்றி அமைத்தால் போதை பொருளை கட்டுப்படுத்த முடியும்.
போதை பொருள் விற்பனையில் இதுவரை 20,240 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குட்கா குறித்து சட்டமன்றத்தில் பேசிய போது எதிர்த்தவர்கள் , வழக்கு தொடுத்தவர்கள் அதிமுகவினர் இப்பொழுது போதைப்பொருள் அதிகரித்து இருக்கிறது என்று பேசுகிறார்கள்.
அண்ணாமலை குறித்து வெளிவந்த ஆடியோ பற்றிய கேள்விக்கு அவர் பேசினேன் பேசவில்லை என்று மழுப்பி வருகிறார். முதல்வர் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து சொல்வது அவரவர் தனிப்பட்ட விருப்பம்.
விநாயகர் சதுரத்திக்கு அரசு விடுமுறை விட்டவரே அண்ணாதான். நீட் தேர்வு மற்றும் இல்லை புதிய கல்விக் கொள்கையும் எதிர்க்கிறோம். அண்ணாவே முதல் தலைமுறை பட்டதாரி தான். இது கூட தெரியாத அண்ணாமலைக்கு நான் என்ன பதில் கூற முடியும்? என்றார் பொன்முடி.