குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள 89 தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்ந்தது.
நாடெங்கிலும் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ள குஜராத் சட்டப்பேரவை தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது. வரும் 1ந்தேதி மற்றும் 5ந்தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
குஜராத்தில் மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் 89 தொகுதிகளில் நாளை மறுதினம் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அந்த தொகுதிகளில் கடந்த சில நாட்களாக அரசியல்கட்சியினர் உச்சக்கட்ட பிரச்சாரங்களில் ஈடுபட்டுவந்தனர். இந்நிலையில் அந்த தொகுதிகளில் இன்று மாலை 5 மணியுடன் தேர்தல் பரப்புரை ஓய்ந்தது. மொத்தம் 788 வேட்பாளர்களின் வெற்றி தோல்விகள் முதல்கட்ட தேர்தலில் நிர்ணயம் செய்யப்பட உள்ளன. வரும் 5ந்தேதி நடைபெற உள்ள இரண்டாம் கட்ட தேர்தலில் 93 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளன.
குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் இமாச்சல் பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 8ந்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.







