குஜராத்தில் நடைபெறும் 2ம் கட்ட தேர்தலில் பிரதமர் மோடி அகமாதாபாத்தில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சொந்த மாநிலமான குஜராத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வருகிறது. 182 சட்டப்பேரவை தொகுதிகளில் முதற்கட்டமாக 89 இடங்களுக்கு கடந்த 1-ந்தேதி தேர்தல் நடந்து முடிந்துள்ளது.
2-வது மற்றும் இறுதிக்கட்டமாக மீதமுள்ள 93 தொகுதிகளுக்கான தேர்தல் இன்று நடக்கிறது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ரணிப்பில் அமைக்கப்பட்ட்டுள்ள வாக்குச்சாவடியில் பிரதமர் மோடி இன்று வாக்களித்தார். பிரதமர் மோடி வாக்களிக்க வருகை தந்ததால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
பிரதமரைக் காண அங்கு பெருமளவில் மக்களும் திரண்டு நின்று இருந்தனர். வாக்குச்சாவடிக்கு வருகை தந்த பிரதமர் மோடி, வரிசையில் நின்று தனது வாக்கினை பதிவு செய்தார். இதேபோல் குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேலும் அகமதாபாத்தில் உள்ள ஷிலாஜ் தொடக்கப்பள்ளியில் இன்று காலை வாக்களிக்கிறார்.







