குஜராத் தேர்தல்; மேலும் 3 வேட்பாளர்களை அறிவித்தது ஆம் ஆத்மி

குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் 3 வேட்பாளர்கள் அடங்கிய 15வது பட்டியலை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ளது.  குஜராத் சட்டப்பேரவை தேர்தல் டிசம்பர் மாதம் இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.…

குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் 3 வேட்பாளர்கள் அடங்கிய 15வது பட்டியலை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ளது. 

குஜராத் சட்டப்பேரவை தேர்தல் டிசம்பர் மாதம் இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, 182 தொகுதிகளை கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு டிசம்பர் 1 மற்றும் டிசம்பர் 5ம் தேதி என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ் கட்சியிடையே நேரடி போட்டி நிலவினாலும் ஏற்கனவே இரண்டு மாநிலங்களில் ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மியும் களம் காண்கிறது. எனவே அங்கு மும்முனை போட்டி நிலவுகிறது.

தேர்தல் நெருங்கி வருவதையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. பிரதமர் மோடியின் சொந்த மாநிலமாக குஜராத் தேர்தலையொட்டி பிரதமர் அடுத்தடுத்து அங்கு பயணம் மேற்கொண்டு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதேபோல் உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பல்வேறு முக்கிய தலைவர்கள் தீவிர பிராசரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இதேபோல் ஆம் ஆத்மி தரப்பில் அக்கட்சியின் நிறுவனரும், தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் குஜராத்தில் பயணம் மேற்கொண்டு தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இந்த தேர்தலுக்கான 15வது வேட்பாளர் பட்டியலை ஆம் ஆத்மி இன்று வெளியிட்டுள்ளது. இதில் சித்பூர் தொகுதியிலி மகேந்திர ராஜ்புத்தும், மாதல் தொகுதியில் லால்ஜி பர்மரும், உதானா தொகுதியில் மகேந்திர பட்டிலும் போட்டியிடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.