குஜராத் பாலம் புனரமைப்பு பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட ரூ.2 கோடியில், ரூ.12லட்சத்தை மட்டும் ஒவேரா நிறுவனம் செலவழித்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே ஒரு தொங்கு பாலம் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த பாலம் சுமார் 100 ஆண்டுகள் பழமையானது. சிதிலம் அடைந்த அந்த பாலத்தை சீரமைக்கும் பணி கடந்த 6 மாதங்களாக நடந்து வந்தது. பணிகள் அனைத்தும் முடிவடைந்ததையடுத்து, மக்களின் பயன்பாட்டுக்காக குஜராத்தில் புத்தாண்டு தினமான கடந்த 26-ந் தேதி பாலம் திறந்து வைக்கப்பட்டது.
இந்த பாலம் கடந்த 30ம் தேதி அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 140க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். இந்த பாலத்தை புனரமைப்பு பணி மேற்கொண்ட நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.
ஒவேரான குழுமத்தை சேர்ந்த ஜெயுஷ் பட்டேல், இந்த பாலத்திற்கான 15 வருடத்திற்கான பராமரிப்பு மற்றும் செயல்பாட்டிற்கான ஒப்பந்தம் செய்துள்ளது. இதையடுத்து கடந்த 6 மாங்களாக நடைபெற்று வந்த பால புனரமைப்பு பணிகள் முடிக்கப்பட்டு குஜராத் புருவருட பிறப்பின் போது திறக்கப்பட்டது. இந்த புனரமைப்பு பணிகளுக்காக 2 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது.
ஆனால், இந்த பால புனரமைப்பு பணிகளுக்காக வெறும் ரூ.12 லட்சத்தை மட்டும் அந்நிறுவனம் செலவிட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. பாலத்தில் வர்ணம் பூசுதல் மற்றும் சில மேலோட்டமான பராமரிப்பு வேலைகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.








