ஐபிஎல் 2023 கிரிக்கெட் தொடரில், ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் அணி அபார வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரின் 16வது சீசன் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில், ஒவ்வொரு அணியும் போட்டிகளில் வெற்றி பெற தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில், ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.
இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய அந்த அணி, 17.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 118 ரன்களுக்கு சுருண்டது. குஜராத் அணி வீரர் ரஷித் கான், அபாரமாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையும் படியுங்கள் : NCL 2023 : 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறி ராமகிருஷ்ணா கல்லூரி அசத்தல்!
இதையடுத்து 119 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி, 13.5 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டுமே விட்டுக் கொடுத்து, இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது. இவ்வாறு 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணி, புள்ளிப்பட்டியலில் 14 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.







