124 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கி விளையாடிய ராமகிருஷ்ணா கல்லூரி அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதி போட்டிக்கு முன்னேறி அசத்தியது.
நியூஸ்7 தமிழ் மற்றும் நியூஸ்7 தமிழ் ஸ்போர்ட்ஸ் இணைந்து மாபெரும் டி20 கிரிக்கெட் தொடரை நடத்தி வருகிறது. இந்த தொடரில் 4 மண்டலங்களிலிருந்து தலா 8 அணிகள் வீதம், 32 அணிகள் கலந்து கொண்டன. லீக் போட்டிகள் நடைபெற்று முடிந்த நிலையில், நேற்றும், இன்றும் காலிறுதிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் இன்று நடைபெற்ற இரண்டாவது காலிறுதி போட்டியில், கோவை மண்டலம் ஶ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி மற்றும் இரத்தினம் கலை அறிவியல் கல்லூரிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராமகிருஷ்ணா கல்லூரி பந்துவீச்சை தேர்வு செய்தது.
20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது இரத்தினம் கல்லூரி 123 ரன்களை சேர்த்தது. ராமகிருஷ்ணா கல்லூரி சார்பில் இன்பான்ட் கிறிஸ்டோபர், இம்ரான் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். 124 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கி விளையாடிய ராமகிருஷ்ணா கல்லூரி அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதி போட்டிக்கு முன்னேறி அசத்தியது.
ராமகிருஷ்ணா கல்லூரி வீரர் விஜய் அபிமன்யு 53 பந்துகளில் 54 ரன்கள் விளாசி ஆட்ட நாயகன் விருது பெற்றார். ஆட்ட நாயகன் விருதை போட்டியின் நடுவர் சிவபாலன் வழங்கினார்.







