ஹைதராபாத் அணியை வீழ்த்தி குஜராத் அணி வெற்றி

15-வது ஐ.பி.எல்-ன் 40வது போட்டியில், ஹைதராபாத் அணியை வீழ்த்தி குஜராத் அணி அபார வெற்றி பெற்றது. 15-வது ஐ.பி.எல்-ன் 40வது போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. இதில், ஹைதராபாத் மற்றும் குஜராத்…

15-வது ஐ.பி.எல்-ன் 40வது போட்டியில், ஹைதராபாத் அணியை வீழ்த்தி குஜராத் அணி அபார வெற்றி பெற்றது.

15-வது ஐ.பி.எல்-ன் 40வது போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. இதில், ஹைதராபாத் மற்றும் குஜராத் அணிகள் களம் கண்டன. டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தார். அதனால், ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்கத்தில் குறைவான ரன்களை மட்டுமே எடுத்த ஹைதராபாத் அணி வீரர்கள், தொடர் விக்கெட்களையும் பெற்றனர்.

ஒருகட்டத்தில், தொடந்து சிக்சர்களை பறக்கவிட்டு யான்சென் – ஷஷாங்க் ஜோடி அதிரடி காட்டியது. இந்நிலையில், 20 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 6 விக்கெட்கள் இழப்பிற்கு 195 ரன்கள் குவித்தது. இதனால், குஜராத் அணிக்கு 196 ரன்கள் வெற்றி இலக்காக அமைந்தது.

அண்மைச் செய்தி: ‘பெட்ரோல்-டீசல் விலையை குறைக்க வேண்டும்’ ரதமர் நரேந்திர மோடிக்கு அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதில்

இரண்டாவதாக பேட்டிங் செய்த குஜராத் அணி தொடக்கத்திலேயே அதிரடி காட்டியது. ஆனாலும், 11 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 96 ரன்களை மட்டுமே எடுத்தது. தொடர்ந்து 19-வது ஓவரில் திவேதியா சிக்சர் பவுண்டரிகளாக அடித்து ஆட்டம் காட்டினார். ஆனாலும், கடைசி ஓவரில் வெற்றிக்கு 22 ரன்கள் தேவைப்பட்டது. இந்நிலையில், 20 ஓவர்கள் முடிவில், 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் குஜராத் அணியை அபார வெற்றி பெற்றது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.