முக்கியச் செய்திகள் இந்தியா

டெல்லியில் புதிய கட்டுப்பாடுகள் அமல்; கொரோனா பரவலை தடுக்க கெஜ்ரிவால் அதிரடி!

வார இறுதி நாட்களில் ஊரடங்கு டெல்லியில் அமல்; தொற்றக் கட்டுப்படுத்த அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி.

நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரக்கூடிய நிலையில் பல மாநில அரசுகள் புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. தொற்று பாதிப்பில் முதல் இடத்தில் இருக்கும் மகாராஷ்டிரா மாநில அரசு 144 ஊரடங்கு மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியிருந்தது. இந்தக்கட்டுப்பாடுகளை மே 1ம் தேதி வரை நீட்டிப்பதாகவும், அத்தியாவசியமற்ற அனைத்து கடைகளும் மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கொரோனா தொற்று பாதிப்பில் 6வது இடத்தில் உள்ள டெல்லி, தொற்று பாதிப்பை தொடர்ந்து எதிர்கொண்டு வருவதால் இன்று முக்கிய அறிவிப்புகளை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இதன்படி வணிக வளாகங்கள், உடற்பயிற்சி கூடங்கள், ஸ்பாக்கள் மூடப்படும் என்றும், உணவகங்களில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளை பொறுத்த அளவில் 30 சதவிகித பார்வையாளர்களுடன் மட்டும் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், வாரம் ஒருமுறை குறிப்பிட்ட பகுதி என சுழற்சி முறையில் சந்தைகள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 17,282 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 104 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Related posts

தியேட்டர்கள் மூடல்.. ஓடிடியை நாடும் திரைப்படங்கள்!

Karthick

மாநிலங்கள் ஏன் கொரோனா தடுப்பூசியை இறக்குமதி செய்கின்றன?

தமிழகத்தில் புதிய உச்சமாக இன்று ஒரே நாளில் 7,819 பேருக்கு கொரோனா உறுதி!

Saravana Kumar