நடிகை ஹன்சிகா நடிக்கும் ‘கார்டியன்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. மீண்டும் பேயாக மிரட்டுகிறார் ஹன்சிகா.
தமிழில் எங்கேயும் காதல் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ஹன்சிகா மோத்வானி, அடுத்தடுத்து மாப்பிள்ளை, வேலாயுதம், வாலு, சிங்கம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். விஜய், தனுஷ், ஆர்யா, சிம்பு உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களுடன் அவர் ஜோடி சேர்ந்துள்ளார். இதனிடையே சில மாதங்களுக்கு முன்பு அவர் தனது நீண்ட நாள் நண்பரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், இப்படத்தின் முன்னோட்டம் இன்று வெளியானது. நடிகர் விஜய் சேதுபதி முன்னோட்டத்தை வெளியிட்டுள்ளார். சுந்தர் சி இயக்கத்தில் உருவான அரண்மனை 2 படத்தில் பேயாக ஹன்சிகா நடித்திருப்பார். இதை தொடர்ந்து கார்டியன் படத்திலும் பேயாக நடித்து மிரட்டியிருக்கிறார். இந்த டீசர் தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.







