ஹரிஷ் கல்யாண் நடித்த “பார்க்கிங்” திரைப்படம் டிசம்பர் 1ல் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி வழங்கும், இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடித்த ‘பார்க்கிங்’ திரைப்படம் டிசம்பர் 1, 2023 அன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

நடிகர் ஹரிஷ் கல்யாண் தன்னுடைய ஒவ்வொரு படத்தின் வெற்றி மூலமும் புதிய புதிய கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பதால் புதிய தலைமுறை ரசிகர்கள் கொண்டாடும் நாயகனாக வளர்ந்து வருகிறார். அவரது அடுத்தப் படமான ‘பார்க்கிங்’ அறிவிக்கப்பட்டதில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்த படத்தின் தயாரிப்பாளர்கள் – பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி ஆகியவை படம் டிசம்பர் 1,2023 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்படும் என அறிவித்துள்ளனர்.
படம் வெளியாவதற்கு முன்பான ப்ரீ-ரிலீஸ் வசூலும் ஒட்டுமொத்த படக்குழுவினரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. ’பலூன்’ படத்தில் கே.எஸ்.சினிஷிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ராம்குமார் பாலகிருஷ்ணன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் இந்துஜா கதாநாயகியாக நடிக்க, எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரா, பிரார்த்தனா நாதன், இளவரசு மற்றும் பல முக்கிய நடிகர்களும் இதில் நடித்துள்ளனர்.







