குரூப் 4 தேர்வு; 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்

தமிழ்நாட்டில் நடைபெறும் குரூப் 4 தேர்வுக்கு 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். இளநிலை உதவியாளார், வரித் தண்டலர், நில அளவையர், வரைவாளர், தட்டச்சர் உள்ளிட்ட 7,382 காலிப் பணியிடங்கள் இந்த எழுத்துத் தேர்வு மூலம்…

தமிழ்நாட்டில் நடைபெறும் குரூப் 4 தேர்வுக்கு 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.

இளநிலை உதவியாளார், வரித் தண்டலர், நில அளவையர், வரைவாளர், தட்டச்சர் உள்ளிட்ட 7,382 காலிப் பணியிடங்கள் இந்த எழுத்துத் தேர்வு மூலம் நிரப்பப்படவுள்ளன. இதற்கான அறிக்கையை அரசுப் பணியாளர் தேர்வாணையம் மார்ச் 29-ஆம் தேதி வெளியிட்டது. மார்ச் 30-ஆம் தேதி முதல் http://www.tnpsc.gov.in என்ற இணையதளம் வாயிலாக தேர்வர்கள் விண்ணப்பித்து வந்தனர். குரூப் 4 எழுத்துத் தேர்வு வரும் ஜூலை 24-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

விண்ணப்பதாரர்கள் தேர்வாணையத்தின் இணையதளங்கள் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க நேற்று கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது, நள்ளிரவு 12 மணி வரை டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது.

அண்மைச் செய்தி: “தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை” – பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாள்

இந்நிலையில், குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தை கடந்துள்ளது. நேற்று இரவு நிலவரப்படி 20 லட்சத்து 53 ஆயிரத்து 837 பேர் விண்ணப்பித்துள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
மொத்தம் 7,382 காலி பணியிடங்களுக்கு நடத்தப்படும் இந்தத் தேர்வில், 81 பணியிடங்கள் ஸ்போர்ட்ஸ் கோட்டா மூலம் நிரப்பப்படுகின்றன. 7301 பணியிடங்களுக்கு போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.