மழை வெள்ளத்தால் மூழ்கிய தரைப்பாலம்

மரக்காணம் அருகே ஓங்கூர் ஆற்று தரைப்பாலம் மழை வெள்ளத்தால் மூழ்கியதால், ஐந்து கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகதில் வடகிழக்கு பருவமழை சில நாட்களாக தொடர்ந்து பெய்து வருகிறது. சென்னை உட்பட கடலோரப் பகுதிகளில், பெய்த…

மரக்காணம் அருகே ஓங்கூர் ஆற்று தரைப்பாலம் மழை வெள்ளத்தால் மூழ்கியதால், ஐந்து கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகதில் வடகிழக்கு பருவமழை சில நாட்களாக தொடர்ந்து பெய்து வருகிறது. சென்னை உட்பட கடலோரப் பகுதிகளில், பெய்த மழையால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கிவருகிறது. இதன் ஒருபகுதியாக விழுப்புரம் மாவட்டத்தில், கடலோரப் பகுதியான மரக்காணத்தில் இரண்டு தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, காணிமேடு – மண்டகப்பட்டு கிராமங்களை இணைக்கும் வகையில் ஓங்கூர் ஆற்றின் தரைப்பாலம் மழை வெள்ளத்தில் மூழ்கியது.

இந்த தரைப்பாலத்தை போக்குவரத்துக்கு பயன்படுத்தி வரும் காணிமேடு, மண்டகப்பட்டு, வெள்ளகொண்ட அகரம், புதுப்பேட்டை உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர்.

மேலும், ஓங்கூர் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக காணிமேடு, மண்டகப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

வெள்ள பதிப்புகளில் இருந்து மக்கள் மீண்டு வர அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அவசர கால உதவிகளை உடனடியாக செய்ய வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிகை விடுத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.