திருமண மேடையிலேயே ரீல்ஸ் வீடியோ தயாரித்த மணமகன்!

பீகாரில் ராஜா எனபவர் தனது திருமண சடங்குகள் முழுவதையும் ரீல்ஸ் வீடியோவாக சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.  மொபைல் போன் இல்லாத பகுதி எங்கேனும் உண்டா .. தேடி சொல்லுங்களேன் எனக் கேட்டால் சட்டென இல்லவே…

பீகாரில் ராஜா எனபவர் தனது திருமண சடங்குகள் முழுவதையும் ரீல்ஸ் வீடியோவாக சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். 

மொபைல் போன் இல்லாத பகுதி எங்கேனும் உண்டா .. தேடி சொல்லுங்களேன் எனக் கேட்டால் சட்டென இல்லவே இல்லை என சொல்லும் அளவுக்கு மொபைல் போன் பயன்படுத்துவோர் எங்கும் நிறைந்துள்ளனர். உலகிலேயே அதிக மொபைல் பயன்படுத்தும் நாடுகளில் சீனா முதல் இடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளது.

இந்நிலையில், தற்போதைய காலகட்டத்தில் ரீல்ஸ் வீடியோ எடுப்பது பலருக்கு பேஷன் ஆகிவிட்டது. லைக்குகளுக்காக வீடியோ பதிவிடும் செயல் அதிகமாகி வருகிறது. மேலும் பிரபலத்திற்காகவும் பலர் வீடியோக்கள் பதிவிட தொடங்கியுள்ளனர். அந்த வகையில் பீகாரை சேர்ந்தவர் ராஜா என்பவர் தனது திருமணத்தின் போது நடைபெற்ற அனைத்து நிகழ்ச்சிகளையும், சடங்குகளையும் ரீல்ஸ் வீடியோவாக தயாரித்து அவற்றை அனைத்து  சமூக வலைதளங்களிலும் வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோக்களில் திருமணத்தின் போது நடைபெறும் சடங்குகளையும், தனது மனைவியுடன் சேர்ந்து நடனம் ஆடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. மேலும் அவரது குடும்ப உறுப்பிர்களுடன் இணைந்தும் பல வீடியோக்களை எடுத்து வெளியிட்டுள்ளார். இந்த வீடியோக்கள 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களை கடந்து வருகிறது. இதற்கு பயனர்கள் பலரும் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.