மண மேடையில் மணமகன் ஒருவர் தூங்கி விழுந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை திருமணம் என்பது ஒருவருது வாழ்வில் மிக முக்கியமான நாள். திருமணத்திற்காக அதிக செலவுகள் செய்யப்படுவதும் இந்தியாவில் தான். திருமணம் செய்பவர்களின் வாழ்வில் மறக்க முடியாத நாளாக இருக்க வேண்டும் என்றே அனைவரும் விரும்புகின்றனர்.
இந்நிலையில் திருமண மேடையில் மணமகன் தூங்கி விழும் வீடியோ ஒன்று சமீபமாக சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த திருமணம் எப்போதும் எங்கே நடந்தது என்ற தகவல்கள் இல்லை. ஆனால் தூங்கி விழும் மணமகனை உறவினர்கள் எழுப்புவதற்கு எவ்வளவோ முயற்சி செய்தும் அவர்களின் பலன் கிடைக்கவில்லை. மணமகனின் அருகில் அமர்ந்து இருக்கும் மணப்பெண்ணும் செய்வதறியாது திகைத்து இருக்கிறார்.

இந்நிலையில் மண மகன் முந்தைய நாள் இரவு முழுவதும் தூங்கவில்லையா அல்லது, திருமணத்திற்கு முன்னதாக மது அருந்தி சுய நினைவை இழந்திருக்கிறாரா என்ற கேள்விகளையும் சமூகவலைதள வாசிகள் எழுப்பியுள்ளனர். எது எப்படி இருந்தாலும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.







