தாத்தாவின் இறுதிச் சடங்கை Vlog வீடியோவாக யூடியூபில் பதிவிட்ட பேரன் – இணையத்தில் வைரல்

தாத்தாவின் இறுதிச் சடங்கை Vlog வீடியோவாக யூடியூபில் பதிவிட்ட பேரனின் செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.  சமிப காலமாக இன்ஸ்டாகிராம், யூடியூப் மற்றும் டிக்டோக் போன்ற சமூக ஊடக தளங்களில் செல்வாக்கு மிக்க நபர்கள் கண்டன்ட் கிரியேட்டர்கள் குவிகின்றனர். இணையம் ஒருவரின்…

தாத்தாவின் இறுதிச் சடங்கை Vlog வீடியோவாக யூடியூபில் பதிவிட்ட பேரனின் செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

சமிப காலமாக இன்ஸ்டாகிராம், யூடியூப் மற்றும் டிக்டோக் போன்ற சமூக ஊடக தளங்களில் செல்வாக்கு மிக்க நபர்கள் கண்டன்ட் கிரியேட்டர்கள் குவிகின்றனர். இணையம் ஒருவரின் திறமைகளை வெளிக்கொணரும் ஒரு பெரிய தளமாக பரிணமித்துள்ளது. இருப்பினும், பல கண்டன்ட் கிரியேட்டர்களால் பகிரப்படும் சில வீடியோக்கள் பார்வையாளர்களைக் குழப்புகின்றன.

வலைப்பதிவாளர் லக்ஷய் சௌத்ரி தனது தாத்தாவின் இறுதிச் சடங்கின் வீடியோவைப் பகிர்ந்துள்ளநிலையில், அவரின் இந்த விலாக் இணையத்தில் நேரம் செலவழிப்பவர்களின் கவனத்தை பெற்று வருகிறது. ஆம், நீங்கள் சரியாகப் படித்தீர்கள்.

400,000 க்கும் மேற்பட்ட சந்தாதாரர்களைக் கொண்ட இந்த வோல்கர், அவரது தாத்தா நீண்ட மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்தியதாக அவரது விலாகில் கூறுகிறார். “நானாஜி கோ ஆகிரி ஷ்ரத்தாஞ்சலி” என்ற தலைப்பில் வீடியோ, யூடியூப்பில் வேகமாக வைரலானது. 100,000 பார்வைகளக் கடந்துள்ள இந்த விலாக், ட்விட்டரில்  சவுத்ரியின் செயல்கள் குறித்து பயனர்கள் தங்கள் குழப்பத்தையும் விமர்சனத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.