மெக்காவில் சானியா மிர்சா – புகைப்படங்கள் இணையத்தில் வைரல்..!

புனித உம்ரா பயணமாக மெக்கா சென்றுள்ள இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன. இஸ்லாம் மதத்தை பின்பற்றுவோர் தங்களது கடமையாக வாழ்நாளில் ஒருமுறையேனும் புனித பயணமாக மக்காவிற்கு பயணம் செல்ல…

புனித உம்ரா பயணமாக மெக்கா சென்றுள்ள இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.

இஸ்லாம் மதத்தை பின்பற்றுவோர் தங்களது கடமையாக வாழ்நாளில் ஒருமுறையேனும் புனித பயணமாக மக்காவிற்கு பயணம் செல்ல வேண்டும். ஓரளவுக்கு பொருளாதார வசதியும் ,உடல் ஆரோக்கியம் உடையவர்களும் இந்த பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்பது முஸ்லிம்களின் கடமையாகும்.

இந்த பயணத்தில் முஸ்லிம்களின் புனித தலங்களான மெக்கா மற்றும் மதீனாவிற்கு செல்வர். அங்கே இறைவனை வணங்கி, இஸ்லாம் மதத்தின் இறைத் தூதராக கருதப்படும் நபிகள் நாயகத்தை அடக்கம் செய்யப்பட்ட கல்லறையை பார்த்து விட்டு வருவது வழக்கம்.

பொதுவாக புனித மெக்கா பயணம் இரண்டு விதங்களில் நடைபெறும். அதனை உம்ரா என்றும் ஹஜ் என்றும் அழைப்பர். முஸ்லிம்களின் பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகைக்கு முன்பாக மெக்காவுக்கு செல்வது ஹஜ் என்றும் பிற மாதங்களில் பயணிப்பது உம்ரா என்றும் அழைக்கப்படும்.

மெக்காவுக்கு செல்வதற்கு முன்னர் சவூதி அரேபியாவின் ரியாத் எனும் பகுதியை அடந்ததும் பயணம் மேற்கொள்வோர் தங்களது அன்றாட உடைகளை மாற்றிவிட்டு தூய வெள்ளை உடையை அணிந்து கொள்வர்.

இந்த நிலையில் இந்திய டென்னிஸ் வீராங்கனையான ஹைதராபாத்தைச் சார்ந்த சானியா மிர்சா தனது குடும்பம் மற்றும் தனது மகனுடன் புனித பயணமாக மெக்காவுக்கு சென்றுள்ளார். இந்த பயணத்தில் தான் எடுத்துக் கொண்ட படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதேபோல இந்தி மொழியில் சின்னத்திரையில் நடித்தவரும் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளருமான ஹினா கான் தனது சகோதரர் மற்றும் தாயுடன் புனித மெக்காவுக்கு சென்றுள்ளார். அவரும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மெக்காவில் எடுத்துக் கொண்ட படங்களை வெளியிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.