பாட்டியிடம் சூதாட பணம் கேட்ட பேரன் – தர மறுத்ததால் பாலியல் வன்கொடுமை செய்து கொலை!

சேலத்தில் சூதாட பணம் தர பாட்டி மறுத்ததால் அவரது பேரனே பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது…

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த தாரமங்கலம் அருகே சின்ன பிள்ளையூரை சேர்ந்த 74 வயதான மூதாட்டி சின்னப்பிள்ளை கடந்த 20-ம் தேதி வீட்டில் இறந்ததாக கூறி உறவினர்கள் அடக்கம் செய்ய முயன்றனர். ஆனால், இறப்பில் சந்தேகம் இருப்பதாக தாரமங்கலம் போலீசாருக்கு, உறவினர்கள் தகவல் கொடுத்தனர்.

புகாரின் பேரில் மூதாட்டியின் உடலை மீட்ட காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். அதன் முடிவில் மூதாட்டியை கழுத்தை நெரித்து பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது  தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், மூதாட்டியின் மகள் வழி
பேரன் பிரகாஷ் என்பவர் சூதாட்டம் ஆட, பாட்டியிடம் பணம் கேட்டு அவர் அதற்கு
மறுத்ததால், பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து, ரூ.5 ஆயிரம் பணம் எடுத்து சென்றது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் பிரகாஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.