ரேஷன் கடைகளில் ஜிபே, பேடிஎம் வசதி: எந்த பிரச்னையும் வராது – அமைச்சர் ஐ.பெரியசாமி

வெற்றிலை பாக்கு கடையில் கூட GPay, Paytm உள்ளது. ரேஷன் கடைகளில் கூகுள் பே பயன்படுத்துவதால் எந்த ஒரு பிரச்னைகளும் வராது என மதுரை விமான விமான நிலையத்தில் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி…

வெற்றிலை பாக்கு கடையில் கூட GPay, Paytm உள்ளது. ரேஷன் கடைகளில் கூகுள் பே பயன்படுத்துவதால் எந்த ஒரு பிரச்னைகளும் வராது என மதுரை விமான விமான நிலையத்தில் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: இன்று முதல் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு ரூ. 1,000 வழங்கும் திட்டம் குறித்து? கேள்வி கேட்டபோது, தமிழக முதல்வர் பள்ளி மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம், மருத்துவக் கல்லூரி, பொறியில் கல்லூரி மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் புரட்சிகரமான திட்டத்தை இன்று தொடங்கிவைத்துள்ளார்.

ரேஷன் கடைகளில் கூகுள் பே திட்டத்தால் பணப் பரிவர்த்தனை ஏற்பட வாய்ப்புள்ளதே
என்ற கேள்விக்கு, சாதாரண வெத்தல பாக்கு கடையில் கூட Paytm உள்ளது. இதன் மூலம் கடலை மிட்டாய் போன்ற சின்ன சின்ன பொருள் வாங்ககூட பயன்படுத்தப்பட்டு வருகிறது. ரேஷன் கடையில் இதனை பயன்படுத்துபவர்கள் பயன்படுத்தலாம். இது கட்டாயமில்லை.

சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சி. நினைவு இல்லம் பொலிவின்றி காணப்படுகிறது?.
எல்லா நினைவுச் சின்னங்களும் முழுமையாக பாதுகாக்கப்படுகிறது. சுதந்திரப் போராட்ட தியாகிகள் நினைவுச் சின்னம் கலைஞர் ஆட்சிக் காலம் முதல் தற்போது ஸ்டாலின் ஆட்சி வரை முறையாக பராமரிக்கப்படுகிறது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.