முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் பணிக்கு வருவதில் இருந்து விலக்கு!

மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்கள் அலுவலகத்திற்கு வருவதிலிருந்து விலக்களித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதை அடுத்து பல்வேறு கட்டுப்பாடுகள் தொடர்ச்சியாக விதிக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் 20-ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு தினமும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அனைத்து கடைகளையும் இரவு 9 மணிக்குள் மூட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி நாளை காலை 6 மணி முதல் பகல் 12 மணிவரை மளிகை, காய்கறி கடைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ ரெயில், தனியார் பஸ்கள், ஆட்டோக்கள், கார்கள் ஆகியவற்றில் 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே பயணிகள் அமர்வதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்கள் அலுவலகத்திற்கு வருவதிலிருந்து விலக்களித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நாளை முதல் 20 ஆம் தேதி வரை அவர்கள் அலுவலகத்துக்கு வரவேண்டாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

7 வயது சிறுமியை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்த நபர்!

Jayapriya

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு தமிழக அரசு ரூ.61 கோடி ஒதுக்கீடு!

Halley karthi

மனநலம் பாதிக்கப்பட்ட நபர் தனக்குத்தானே செய்துகொண்ட கொடுமை

Vandhana