முக்கியச் செய்திகள் தொழில்நுட்பம் தமிழகம்

அரசு கேபிள் டிவி முடக்கம் – செயலிழப்பு செய்த நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு

அரசு கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ்களின் கட்டுப்பாட்டு மென் பொருளை அத்துமீறி செயலிழப்பு செய்த நிறுவனத்தின் மீது குற்ற வழக்கு பதிவு செய்துள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: ”தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சேவை மென்பொருளை, பராமரித்து வரும் தனியார் நிறுவனத்தால் சட்டவிரோதமாக செயலிழப்பு செய்யப்பட்டதன் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ​கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ்களின் கட்டுப்பாட்டு மென் பொருளை அத்துமீறி இணைய வழியில் நுழைந்து, செயலிழப்பு செய்த நிறுவனத்தின் மீது குற்ற வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

​இந்நிலையில் தகவல் தொழில்நுட்பத் துறையின் தொழில்நுட்ப குழுவின் உதவியுடன் பாதிக்கும் மேற்பட்ட செட்டாப் பாக்ஸ்கள் தற்பொழுது சரி செய்யப்பட்டுள்ளன. மேலும், கேபிள் ஆபரேட்டர்கள் நேரடியாக செட்டாப் பாக்ஸ்களில் சில மாற்றங்களை செய்து அதை இயக்கும் தற்காலிக தீர்வு குறித்தும் விளக்கப்பட்டு, அம்முறையிலும் இச்சிக்கலுக்குத் தற்காலிக தீர்வு காணப்பட்டுள்ளது.

​தற்போது, மென்பொருள்களை வழங்கிய முதன்மை நிறுவனத்துடன் அதை நேரடியாக பெறுவதற்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் இந்த தொழில்நுட்ப பிரச்னைகள் சரி செய்யப்பட்டு சேவைகளை வழங்க அரசு கேபிள் டிவி நிறுவனம் முழுமூச்சுடன் செயல்பட்டு வருகிறது. ​

இதுவரையில் அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய கேபிள் ஆபரேட்டர்கள் பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.இந்த தற்காலிக பிரச்னையை சீரமைக்கும் வரை ஒத்துழைப்பு நல்க வேண்டுமென பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.” இவ்வாறு தமிழ்நாடு அரசு தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. மேலும் கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் தொழில் நுட்ப உதவி பெற எண்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தமிழக ஆசிரியர் உள்பட 46 பேர் தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வு

Web Editor

‘இளைஞர்கள் அக்னிபத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’ – முன்னாள் அமைச்சர்

Arivazhagan Chinnasamy

சர்ச்சை கருத்து-தெலங்கானா பாஜக எம்எல்ஏ மீண்டும் கைது

Web Editor