முத்துராமலிங்க தேவரின் திருவுருவ படத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்திவிழாவையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி மலர்தூவி மரியாதை செலுத்தினார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 115-வது ஜெயந்தி விழா மற்றும் 60-வது குருபூஜை விழாவை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது சிலைக்கு காலையில்…

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்திவிழாவையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 115-வது ஜெயந்தி விழா மற்றும் 60-வது குருபூஜை விழாவை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது சிலைக்கு காலையில் இருந்து அரசு சார்பில் அமைச்சர்கள் துரைமுருகன், நேரு, பெரியசாமி, மூர்த்தி ஆகியோரும் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், ஆர்.பி.உதயகுமார், செல்லூர் கே.ராஜு மற்றும் எம்.எல்.ஏ க்கள் ராஜன் செல்லப்பா, பெரிய புள்ளான் (எ) செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதேபோல் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர்  ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்கள் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

https://twitter.com/rajbhavan_tn/status/1586555178739650560

 

இந்த நிலையில், தேவர் குருபூஜை விழாவையொட்டி, சென்னை, கிண்டி ஆளுநர்  மாளிகையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முத்துராமலிங்க தேவரின் உருவப்படத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் புரட்சிகர சுதந்திரப் போராட்ட வீரர், தொலைநோக்கு தேசியவாதி, ஆன்மீக தலைவர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி. அவரது வாழ்க்கை தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.