தமிழ்நாடு ஆளுநர் அர்லேகர் முழு நேர ஆளுநராக பதவி ஏற்ற பின் கடந்த வாரம் டெல்லி சென்றார். அப்போது குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசுத் துணைத் தலைவர் மற்றும் பிரதமர் மோடி ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்திருந்தார்.
அதே வேளையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் சந்திக்க நேரம் கேட்டு இருந்தார். அந்த நேரம் அமித்ஷா டெல்லியில் இல்லாததால் அவரை சந்திக்க முடியவில்லை. இதனால் தமிழ்நாடு ஆளுநர் அர்லேகர் நாளை உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கிறார். உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கும் போது தமிழ்நாடு அரசியல் நிலவரம் குறித்து விளக்குவார்.
தமிழக சட்டம் ஒழுங்கு தொடர்பாக அறிக்கை கேட்டிருந்தால் அதை கொடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து 13-ம் தேதி ஜம்மு செல்லும் ஆளுநர் 14ம் தேதி டெல்லி திரும்புகிறார். டெல்லியில் இருந்து 15ம் தேதி சென்னை திரும்புகிறார்.




