அரசுப் பள்ளிகளுக்கு ரூ.50 லட்சம் செலவில் கல்வி உபகரணங்கள்!

வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து, அரசுப் பள்ளிகளுக்கு ரூ.50 லட்சம் செலவில் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. வடசென்னைக்கு உட்பட்ட திருவொற்றியூர், மணலி, எண்ணூர் உள்ளிட்ட பகுதிகளில், வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி,…

வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து,
அரசுப் பள்ளிகளுக்கு ரூ.50 லட்சம் செலவில் கல்வி உபகரணங்கள்
வழங்கப்பட்டன.

வடசென்னைக்கு உட்பட்ட திருவொற்றியூர், மணலி, எண்ணூர் உள்ளிட்ட
பகுதிகளில், வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, தொகுதி
மேம்பாட்டு நிதியிலிருந்து, பள்ளிக்குத் தேவையான மேசை, நாற்காலி உள்ளிட்ட
கல்வி உபகரணங்களை வழங்கினார்.

முன்னதாக மணலி அரசினர் பள்ளி, எண்ணூர் கத்திவாக்கம், எர்ணாவூர் அரசு பள்ளி மற்றும் திருவொற்றியூர் ஜெயகோபால் கரோடியா மேல்நிலைப்பள்ளி, மாநகராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளிட்ட 5 பள்ளிகளுக்கு, ரூ.50 லட்சம் செலவில் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

எர்ணாவூர் அரசு பள்ளி மாணவர்களிடையே நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி பேசினார். அப்போது அவர் தமிழ்நாடு அரசு ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை மற்றும் இடஒதுக்கீடு என, பல்வேறு சலுகைகள் வழங்கியிருப்பதாகவும் கூறினார். அதனை பயன்படுத்தி நன்றாக படித்து முன்னேற வேண்டும் என அறிவுறுத்தினார்.

பின்னர், காலடிப்பேட்டை பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில், மாணவ மாணவியர்களுக்கு பொன்னாடை அணிவித்து ஊக்கப்படுத்தினார். இந்நிகழ்ச்சியில், மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம், மாநகராட்சி மண்டல குழு தலைவர் தனியரசு,
மேற்கு பகுதி செயலாளர் அருள்தாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கு. பாலமுருகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.