நியாயவிலைக்கடைகளில் பனைவெல்லம் விற்பனையை அதிகரிக்க நடவடிக்கை – தமிழ்நாடு அரசு

நியாயவிலைக்கடைகளில் பனைவெல்லம் விற்பனையை அதிகரிக்க கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கூட்டுறவுத் துறை இணைப் பதிவாளர் மற்றும் துணை பதிவாளர்களுக்கு கூட்டுறவுச்சங்கங்களின் பதிவாளர் விடுத்துள்ள அறிக்கையில், அரிசி கடத்தல்…

நியாயவிலைக்கடைகளில் பனைவெல்லம் விற்பனையை அதிகரிக்க கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

கூட்டுறவுத் துறை இணைப் பதிவாளர் மற்றும் துணை பதிவாளர்களுக்கு கூட்டுறவுச்சங்கங்களின் பதிவாளர் விடுத்துள்ள அறிக்கையில், அரிசி கடத்தல் கண்டுபிடிக்கப்பட்ட இடத்திற்கு அருகில் உள்ள நியாய விலைக் கடைகளில் 24 மணி நேரத்திற்குள் பறக்கும் படையினர் சோதனை செய்ய வேண்டும் என்றும், அரிசி கடத்தலில் ஈடுபட்ட நபர்களை உடனடியாக தற்காலிக நீக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், நியாயவிலைக் கடைகளில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் பனைவெல்லம் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து, விற்பனையை அதிகரிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி, பனைவெல்லத்தை கொள்முதல் செய்யாமல் உள்ள 17 மண்டலங்களில் பனைவெல்லம் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.