முக்கியச் செய்திகள் தமிழகம்

இதய துடிப்பு நின்ற சிறுமியின் உயிரை காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்

மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டு, இதய துடிப்பு நின்ற சிறுமியை, அரசு மருத்துவர்கள் உயிர் பிழைக்க செய்துள்ள சம்பவம், நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம், லால்குடி பூவாளுர் பகுதியை சேர்ந்த சிறுமி தீபிகா, விளையாடி கொண்டிருந்தபோது தேங்கியிருந்த மழை நீரில், தவறுதலாக, காலை வைத்துள்ளார். தேங்கிய நீரில் மின்சாரம் பாய்ந்து சிறுமியைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால், தூக்கி வீசப்பட்டு மூர்ச்சையடைந்த சிறுமி தீபிகா, சிகிச்சைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இதய துடிப்பு நிற்கவே, எவ்வித அசைவும் இன்றி, சிறுமி இருந்துள்ளார். இதையடுத்து அரசு மருத்துவர்கள் துரிதமாக செயல்பட்டு, அதிநவீன கருவியின் உதவியோடு, 5 முறை ஷாக் கொடுத்தும், ஆக்சிஜன் அளித்து சுவாசத்தை சீர் செய்தும், சிறுமியை உயிர் பிழைக்க செய்துள்ளனர்.

அரசு மருத்துவர்கள் துடிப்பாக செயல்பட்டு, சிறுமியை உயிரைக் காப்பாற்றிய செயலை கிராம மக்கள் வெகுவாக பாராட்டினர்.

Advertisement:
SHARE

Related posts

புதுச்சேரியில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று பாதிப்பு!

Halley Karthik

4வது டோஸ் தடுப்பூசி செலுத்த அனுமதி அளித்த இஸ்ரேல் அரசு

Saravana Kumar

“விவசாயிகளின்‌ நண்பன்‌ பிரதமர் மோடி” – ஓ.பி.எஸ்

Halley Karthik