30 C
Chennai
May 20, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம்

மாமண்டூர் பயண வழி உணவகத்தில், அரசு பேருந்துகள் நின்று செல்ல தடை

பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட புகாரின் பேரில், தரமற்ற உணவு வழங்கிய மாமண்டூர் பயண வழி உணவகத்தில், அரசு பேருந்துகள் நின்று செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன்னுக்கு, Star Associates Salem ஒப்பந்ததாரர் நடத்தும் மாமண்டூர் பயண வழி உணவகம் மற்றும் கடைகளில் உணவின் தரம் குறைவாகவும், விலைகள் அதிகமாகவும் இருப்பதாக பல்வேறு புகார்கள் பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதன் அடிப்படையில் கடந்த 29-ஆம் தேதி அன்று போக்குவரத்து கழக அலுவலர்கள் அங்கு ஆய்வு மேற்கொண்டு உணவு சுகாதாரமின்றி, தரமற்றதாக உள்ளது எனவும், அனைத்து உணவுப் பொருட்களும் விற்பனை விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்ததும் கண்டறியப்பட்டு, குறைகளை சுட்டிக்காட்டி அதனை நிவர்த்தி செய்து, விபரத்தை தெரிவிக்குமாறு கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி அன்று புகார் அறிக்கை ஒப்பந்ததாரருக்கு அனுப்பப்பட்டது.

தொடர்ந்து, பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் கடந்த ஜனவரி 20-ஆம் தேதி அன்று போக்குவரத்து கழக அலுவலர்கள் மீண்டும் ஆய்வு மேற்கொண்டு உணவுக் கூடம் சமையலறை, மற்றும் வளாகங்கள் சுகாதார சீர்கேடான நிலையில் உள்ளதை கண்டறிந்து மீண்டும் புகார் அறிக்கையை அதே ஒப்பந்ததாரருக்கு அனுப்பப்பட்டது.

ஆனால், இன்றைய தினம் மேற்கொண்ட ஆய்விலும் அந்த உணவகம் குறைபாடுகள் ஏதும் சரி செய்யப்படாமல் இயங்குவது கண்டறியப்பட்டு, அரசு போக்குவரத்து கழகப் பேருந்துகள் மாமண்டூர் சாலை வழி உணவகத்தில் நின்று செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், உடனடியாக Star Associates Salem, ஒப்பந்ததாரரின் ஒப்பந்தத்தை ரத்து செய்து தரமான உணவு வழங்கும் ஒப்பந்ததாரரை நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அண்மைச் செய்தி: டெல்லியில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் இனி அம்பேத்கர், பகத்சிங் உருவப்படங்கள்

மேலும், அரசு பேருந்துகள் நின்று செல்லும் பயண வழி உணவகங்கள் அனைத்திலும் ஆய்வுகள் நடத்தப்படும் என்றும், தரம் குறைவாகவும் கூடுதல் விலைக்கும் உணவு வழங்கும் உணவகங்களின் ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டு, தரமான உணவு குறைந்த விலையில் உணவு வழங்கும் நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading