வேலையின்மை பிரச்னைக்கு அரசால் மட்டும் தீர்க்க முடியாது என்று மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி. ஆனந்த நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச தொழிலாளர் அமைப்பு மற்றும் மனித மேம்பாட்டு நிறுவனம் இணைந்து நடத்திய ஆய்வில் 2024 ஆம் ஆண்டில் இந்தியாவில் வேலையில்லாதவர்களின் சதவிதம் 83% ஆக உயர்ந்துள்ளதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டது. நாட்டில் வேலைவாய்ப்பு பிரச்னையை முன்வைத்து அனைத்து அரசியில் கட்சிகளும் தங்களது தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள் : ரோஸ் உயிரைக் காப்பாற்றிய டைட்டானிக் கதவு | ரூ.5.99 கோடிக்கு ஏலம்!
காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதிகளிலும் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்புகள் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், புதுடெல்லியில் உள்ள மனிதவள மேம்பாட்டு நிறுவனம் நடத்திய “இந்திய வேலைவாய்ப்பு 2024” ஆய்வு அறிக்கையை வெளியிட்ட இந்திய தலைமை பொருளாதார ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரன் வேலைவாய்ப்பு குறித்து பேசினார்.
இந்த விழாவில் ஆனந்த நாகேஸ்வரன் பேசியதாவது :
“வேலைவாய்ப்புக்கு அரசால் என்ன செய்ய முடியும் என்பதை நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டும். வேலையின்மை பிரச்னையை மத்திய அரசால் மட்டுமே முழுமையாக சரி செய்ய முடியாது. நாட்டில் லாபம் ஈட்டக்கூடிய கார்ப்ரேட் நிறுவனங்கள் அதிகளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். இந்தியாவில் தொழிலாளர்களுக்கு இடையில் ஏற்றத்தாழ்வுகள் உள்ளது. குறிப்பாக பெண் தொழிலாளர்கள் மீதான பாரபட்சம் தொடர்ந்து வருகிறது. கடந்த 2005 முதல் 2022 வரை வேலைவாய்ப்பு கணக்கீடுகளை ஒப்பிட்டால், வேலைவாய்ப்பு வழங்கும் சதவிகிதம் சீராக உயர்ந்து வருகின்றது. கொரோனாவுக்கு பிறகு பல்வேறு முயற்சிகள் எடுத்த போதிலும், வேலையின்மை பிரச்னை உயர்ந்து உள்ளது”
இவ்வாறு ஆனந்த நாகேஸ்வரன் தெரிவித்தார்.






