சென்னை கேகே நகர் பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை கே.கே.நகரில் உள்ள பத்ம சேஷாத்ரி பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன், மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். அவரிடம் மாணவிகள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையின் போது ஆசிரியர் ராஜகோபாலன் ஆன்லைன் வகுப்பிற்கு வீடியோவில் வரும் மாணவிகளை ஆபாசமாக புகைப்படம் எடுத்து ரசித்ததும் தெரியவந்தது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர் ராஜகோபாலனை குண்டர் சட்டத்தில் அடைக்க சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். அவர் மீதான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.







